பிஎஸ்எல் 2021 ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயத்தால் பாஃப் டூப்ளசிஸ் மருத்துவமனையில் அனுமதி !

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் அபதாபியில் நடைபெற்று வருகிறது.இதில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் – பெஷாவர் ஷால்மி ஆகிய அணிகள் மோதின.

பீல்டிங்கின் போது வீரர்களில் ஒருவருடன் மோதியதால் பிரபல வீரர் பாஃப் டூப்ளசிஸ் காயம் அடைந்தார்.இந்த போட்டியில் டேவிட் மில்லர் அடித்த பந்தை தடுப்பதற்காக டூப்ளசிஸ் ஓடினார்.

அப்போது எதிரே சக வீரர் முகமது ஹஸ்னைன் ஓடிவந்தார்.அப்போது டூப்ளசிஸ் தலை ஹஸ்னைன் காலில் மோதியது.அப்போது அவர் அங்கே சுருண்டு விழுந்தார்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.டூப்ளசிஸ் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.இதனால் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வேண்டுகின்றனர்.