பயணிகளுக்கு ஒரு நற்செய்தி..விநாயகர் சதுர்த்திக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் !

கொரோனா தொற்றின் 2 ம் அலை காரணமாக தமிழகத்தில் அதிக தொற்று பரவியது.மேலும் இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.

தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் தற்போது இந்த ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 10-ந்தேதி வருகிறது அதை தொடர்ந்து சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை வருகிறது. வருகிற வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முகூர்த்த நாளாகவும் இருக்கிறது.

இந்த நாட்களில் பயணிகள் அதிகம் பயணிக்கக்கூடும் என்பதால் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பஸ்களோடு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,000 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளோம்.

இன்று கூடுதலாக 100 பஸ்களும், நாளை 300 பஸ்களும், 9-ந்தேதி 600 பஸ்களும் இயக்கப்படுகிறது. மென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.