ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவு

ஏப்ரல்-நவம்பர் மாத காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.84 விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ளதாக வர்த்தகத் துறைச் செயலர் அனுப் வதாவன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மருந்து வர்த்தகம் ஏற்றுமதி 15 விழுக்காடு உயர்வைக் கண்டதாகத் தெரிவித்த அவர், நெல், இருப்பு ஏற்றுமதியும் நல்ல உயர்வைக் கண்டதாகக் கூறினார்.இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 2025ஆம் ஆண்டில் நாட்டின் வர்த்தக இலக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் எட்டப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், நாட்டின் தொழில் துறை மேம்பாட்டிற்காக 10 முக்கியத் துறைகள் கண்டறியப்பட்டு அதன்மூலம் ரூ.20 லட்சம் கோடி வருவாய் ஈட்ட அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் கூறினார்.