பாம்பனிலிருந்து வடகிழக்கே நிலைகொண்டுள்ள புரெவி புயல்!

ராமேஸ்வரம் பாம்பனிலிருந்து 90 கிமீ வடகிழக்கே புரெவி புயல் நிலைகொண்டுள்ளது.

இந்த நிலையில் புயலானது தற்போது, தமிழ்நாட்டின் பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் இப்புயல் நாளை (நள்ளிரவு முதல்) கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.