ஆப்கானிஸ்தானில் இருந்து 3,200 பேரை வெளியேற்றிய அமெரிக்க ராணுவம்

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளதுடன், தலீபான் பயங்கரவாதிகள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.

இதனையடுத்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை காலி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன. இதேபோன்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

இதன்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 3,200 பேரை அமெரிக்க ராணுவம் வெளியேற்றி உள்ளது என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என்று ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் தங்களுடைய நாட்டு குடிமக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.