டி20 தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனா இயான் மோர்கன் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும், 16 வீரர்கள் கொண்ட வலிமையான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனா இயான் மோர்கன் அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 26-ம் தேதி இங்கிலாந்து வீரர்கள் அமகதாபாத் புறப்பட்டுச் செல்கின்றனர்.

இங்கிலாந்து டி20 அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோர்கன் என வலிமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் கலக்கிய லிவிங்ஸ்டோன் முதல்முறையாக டி20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.