Jharkhand COVID curbs: ஜார்க்கண்டில் கல்வி நிறுவனங்களை மூட மாநில அரசு உத்தரவு

Jharkhand COVID curbs
ஜார்க்கண்டில் கல்வி நிறுவனங்களை மூட மாநில அரசு உத்தரவு

Covid Curbs: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2ம் தேதி நிலவரப்படி புதிதாக 1007 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இது குறித்து ஜார்க்கண்ட் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மாநிலத்தில் உள்ள அனைத்து மைதானங்கள், பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலாதலங்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும். மேலும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும், 50% பணியாளர்களுடன் அரசு பணிகள் அனுமதிக்கப்படும்.

இரவு நேர ஊரடங்கு உத்தரவு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கு அதிகபட்சமாக 100 பேர் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8 மணிக்கு சந்தைகள் மூடப்படும்.

மருந்துக் கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபானபார்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது. மத வழிபாட்டு தலங்களும் திறந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: School Closed: ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகள் மூடல்..!