education news: பள்ளிக்கு செல்ல கட்டாயம் இல்லை !

holiday-for-schools-and-colleges-in-erode
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

education news : கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில்,இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெற்றன.education news

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது தற்போது மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு வரலாம் என கூறியுள்ளது.