education news : மாணவர்கள் கவனத்திற்கு..நாளை மறுதினம் தொடங்குகிறது !

CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

education news :  கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.தற்போது இந்த மூன்றாம் அலையில் பரவலை தடுக்க வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில்,இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக கிட்டத்தட்ட 2 வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.கடந்த செப்டம்பர் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகள் நடைபெற்றன.

தற்போது கொரோனா தொற்றின் மூன்றாம் அலை காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.தற்போது தொற்று குறைந்து வருவதால் பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.education news

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் கொண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வை பொதுத்தேர்வு போல நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு நாளை மறுதினம் 9ம்தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு தொடங்கி வரும் 15ம்தேதி வரை நடக்கிறது. காலை 10 மணி முதல் 1 மணி வரை இத்தேர்வு நடைபெறும்

அதேபோல் பிளஸ்2 மாணவர்களுக்கு 9ம்தேதி தொடங்கி 16ம்தேதி வரை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை தேர்வுத்துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ? அதுபோன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன், திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Karnataka Hijab Row:கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதி !