தமிழகத்தை பாடத்திட்டம் 40 சதவீதம் குறைப்பு-அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தை பாடத்திட்டம் 40 சதவீதம் குறைப்பு என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பாடத்திட்டம் 40 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் குருமந்தூர் நம்பியூர் பகுதியில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், சத்துணவு கூடங்களுக்கு உபகரணங்களை வழங்கி பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அனைத்து போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர் கொள்ளும் வகையிலேயே பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.