சசிகலா அ.தி.மு.கவிலேயே இல்லை- எடப்பாடி

சசிகலா அ.தி.மு.கவிலேயே இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலின்போதே அரசியலிலிருந்து விலகிவிட்டதாக அறிக்கை கொடுத்துள்ளார். அவர் அ.ம.மு.க நிர்வாகிகளிடம் பேசுகிறார். எனக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சென்னையில் புதுவீட்டுக்கு இடம்பெயர்ந்த காரணத்தால் ஆலோசனையில் பங்கேற்கவில்லை’ என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க கூட்டணி தோல்வியடைந்தது. தேர்தல் தோல்விக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்வு செய்வதில் அ.தி.மு.கவிற்குள் இழுபறி நீடித்தது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் எதிர்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு தீவிர முயற்சி செய்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.