கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்- எடப்பாடி

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசாங்கம் தனி கவனம் செலுத்தி, கருப்பு பூஞ்சை நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் பேசுகையில், “சேலம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். சேலம், ஆத்தூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. ஐசியு சேர்த்து ஆக்ஸிஜன் 1153 படுக்கைகள் நிரம்பிவிட்டன. எனனே, எவரேனும் டிஸ்சாரஜ் ஆனால்தான் புதிதாக தொற்று ஏற்படுவோருக்கு படுக்கை கிடைக்கிறது” என்று கூறினார்.