இன்று வெளியாகும் தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை சுமூகமாக நடத்தியுள்ளது. அடுத்ததாக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது.

காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ன்ட் கட்சிகளுடன் இழுபறி நீடித்தநிலையில் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 12-ம் தேதி 19-ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் 20-ம் தேதியாகும்.

நாள்கள் குறைவாக உள்ளதாக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் இறுதி செய்யவேண்டிய நெருக்கடியில் உள்ளனர். தி.மு.கவைப் பொறுத்துவரை இன்று ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களையும் இன்று வெளியிட உள்ளனர்.