உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நாளை தமிழக முதல்வர் ஆலோசனை !

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்
நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது.இதில் திமுக ஆட்சி வெற்றி பெற்று ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனார்.திமுகவின் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 25 ம் தேதி நடைபெற்றது.

புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் சில நாட்களில் வரும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்,பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.