திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை..!

திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை என்றும் அதிமுகதான் பாஜகவின் பி டீம் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி கனிமொழி, ”கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அறிவித்த எந்தத் திட்டத்தையும் முடித்துத் தரவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சசிகலா எங்கள் அம்மா என்றனர். இப்போது டெல்லியிலிருந்து என்ன சொல்கிறார்களோ அதைச் செய்கின்றனர். தரக்குறைவான விமர்சனத்தை வைக்கின்றனர்.

நான்கு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் சென்னை திரும்பிய சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தியதைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலாவுக்கும் திமுகவுக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சசிகலாவும், டிடிவி தினகரனும் திமுகவுக்கு பி டீமாக செயல்படுகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.