குடும்ப அரசியலை கலைந்தெடுப்பதே எங்கள் நோக்கம்- அமித்ஷா

தி.மு.க, காங்கிஸூக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று சென்னை சேப்பாக்கத்திலுள்ள கலைவாணர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அதன்பிறகு பேசிய அவர், ‘நரேந்திர மோடி அரசியல் களத்திற்கு வந்த பிறகு 3 முக்கிய விஷயங்களை எதிர்த்தார். ஊழல்வாதம், பரம்பரைவாதம்(குடும்ப அரசியல்), சாதியவாதம். குடும்ப அரசியலை இங்கே நடத்தி வரும் சிலர், நாடு முழுவதும் அதை செயல்படுத்த நினைக்கின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் குடும்ப அரசியலை விரட்டி அடித்தது போல் தமிழகத்திலும் விரட்டி அடிப்போம் என்பதை அடித்துச் சொல்கிறேன். ஊழலைப் பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னை வந்திருக்கிறேன். அதனால் அரசியல் பேசலாம் என நினைக்கிறேன். தி.மு.க தலைவர்கள் மத்திய அரசு துரோகம் இழைத்தது என குற்றம் சாட்டுகிறார்கள்.