தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க. ஸ்டாலின் !

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது.இந்த முடிவு மே 2 ம் தேதி வெளியானது.இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது.

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற்றது.ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் மு.க. ஸ்டாலினுக்கு பதவி பிரமாணம் வாசித்து முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதன்மூலம் அதிகாரப்பூர்வமாக மு.க. ஸ்டாலின் முதலமைச்சரானார்.மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.