தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு !

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.இந்நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் பணிகளில் தீவிரம் காட்டிவருகின்றன.

தி.மு.க விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

தற்போது இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீட்டை உறுதி செய்துள்ளது. இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கூட்டணி ஒப்பந்தத்தில் முத்தரசன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டார்.