தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் !

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கொஞ்ச காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.சிகிச்சைக்காக இன்று காலை விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்.

மேலும் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த சில ஆண்டுகளாக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

விமான நிலையத்தில் அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் சக்கர நாற்காலியில் காணப்பட்டார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார்.தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரிசோதனை முடிந்து ஓய்வு பெற்று பிறகு தாயகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.