தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்சனை இருந்து வந்தது.இதனால் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்குகொள்ளாமல் இருந்தார்.
மேலும் கடந்த 19-ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது இதற்கிடையே, விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.
தற்போது கரோனா தொற்று பரவும் நிலை இருப்பதால் தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் வந்து சந்திப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



