கனரக வாகனங்களுக்கான ஆவணங்களை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் !

இந்தியாவில் கொரோனா தொற்றின் பரவல் இருப்பதால் அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது அனைத்து கனரக வாகனங்களுக்கான தகுதி சான்றுகள், ஆவணங்களை புதுப்பிக்க செப்.30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியீட்ட அறிக்கையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் (ஆர்.சி), பிட்னஸ் சான்றிதழ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இதில், 7,000 கிலோ வரை எடை உள்ள இலக்கு ரக வாகனங்களுக்கு ரூ.300 பதிவு கட்டணமாகவும், 7,000 முதல் 12,000 கிலோ வரை எடை உள்ள மத்திய ரக வாகனங்களை ரூ.400 பதிவு கட்டணமாகவும், 12,000 கிலோக்கும் அதிகமாக எடை உள்ள வாகனங்கள் கனரக வாகனங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான தகுதிச் சான்றை புதுப்பிக்கும் போது, ஒளி விளக்கு, பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள், பிரேக் உள்ளிட்ட உதிரி பாகங்களும் மாற்றியமைக்கப்படுகிறது.

அனைத்து கனரக வாகனங்களையும் புதுப்பிக்க செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.