சார்பட்டா படத்தில் ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் உச்சம்..!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள சாப்பட்டா பரம்பரைத் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகியுள்ளது. 1970-களின் மத்தியில் சென்னை சென்ட்ரலை ஒட்டியப் பகுதியின் முக்கியக் கலாச்சாரமாக இருந்த குத்துச் சண்டையை மையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருந்தது.

படத்தின் செய்நேர்தி காரணமாக படம் அனைத்து தரப்பினிடையேயும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படத்தைப் பாராட்டிவருகின்றனர். ஆர்யாவும் இந்தப் படத்துக்கு மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், சார்பட்டா படம் குறித்த இயக்குநர் மோகனின் ட்விட்டர் பதிவில், ‘சார்பட்டா பரம்பரையின் மொத்த குழுவும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஆர்யாவின் மிகச் சிறந்த நடிப்பு. பசுபதி, ஜான் விஜய், டேன்சிங் ரோஸ் கதாபாத்திரங்கள் கவனிக்கத் தக்கவை. இயக்குநர் ரஞ்சித் சாரின் கடின உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் உச்சம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.