பொம்மை நாயகி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பாக 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார்.

இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்‌ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த 5 படங்களில் யோகிபாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது.

இதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் யோகி பாபுவுடன் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.