அண்ணாத்த திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி நஷ்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் அண்ணாத்த திரைப்படத்தால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த வெளியான முதல் வாரத்திலேயே பெரிதாக வசூல் இல்லை என்று கூறப்பட்ட நிலையில், கடந்த வாரம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள் காற்று வாங்கின. இருப்பினும்,அண்ணாத்த திரைப்படம் வசூலில் மாஸ் என்பது போல பொய்யான பிம்பத்தை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு டிக்கெட் விற்பனையையும் கண்காணிக்க வெளிப்படையான அமைப்பு இல்லாததாலும், வசூல் குறித்த தகவலை பகிர்ந்து கொள்வதில் சன் பிக்சர்ஸ் மௌனம் காத்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, அண்ணாத்த திரைப்படம் 169 கோடி வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் படத்திற்கான மொத்த செலவு 182 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 14.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.