மூன்று மாவட்டங்களில் அதிகம் காணப்படும் டெல்டா பிளஸ்

சென்னை–தமிழகத்தில், ‘டெல்டா பிளஸ்’ கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி, தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்புவிற்கு, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ்புஷன் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி வருகிறது. அதன் விபரத்தை, மத்திய சுகாதாரத் துறை தெரியப்படுத்தி வருகிறது. முக்கியத்துவம்தற்போது டெல்டா பிளஸ் எனப்படும், உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது மிகவும் வேகமாக பரவக்கூடியது. நுரையீரலை கடுமையாக பாதித்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். இத்தகைய வைரஸ், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்ள வேண்டும்.குறிப்பாக, மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கடிதம்பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளை, கூடுதலாக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். தமிழகத்தை போன்றே, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவிஉள்ள குஜராத், ஆந்திரா, ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், ஹரியானா மாநிலங்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை செயலர் கடிதம் எழுதி உள்ளார்.