ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்- மத்திய அரசு

நாட்டில் இந்த ஆண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணபத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில்மத்திய அரசு மொத்தம் 35.6 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. மே முதல் ஜூலை மாத வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மேலும் கூடுதலாக 16 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். இதன்படி ஜனவரி முதல் ஜூலை வரை 51.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 94 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த 186 முதல் 188 கோடி வரையிலான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும்.