என்னது தடுப்பூசி போடவில்லை என்றால் 15 ஆயிரம் ரூபாய் அபராதமா !

கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க தடுப்பூசி ஒன்றே மிக சிறந்த வழி.மேலும் உலக நாடுகள் மற்றும் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வலியுறுத்துகிறது.மேலும் அணைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அமெரிக்காவில் உள்ள டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு 200 டாலர் மாதாந்திர கட்டணம் விதிக்கப்படும் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது.அதாவது இந்திய ரூபாய்க்கு 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மேலும் செப்டம்பர் 12 முதல், முழுமையாக தடுப்பூசி போடப்படாத எந்த அமெரிக்க ஊழியரும் ஒவ்வொரு வாரமும் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான ஊழியர்களுக்கு $ 50,000 ஆகிறது என்பதால் இந்த அதிரடி முடி எடுக்கப்பட்டுள்ளது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.