டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்று மாசு

சாதகமான வானிலை இருந்ததன் காரணமாக டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டிருப்பினும் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் காற்று மாசு எச்சரிக்கை அமைப்பின் தகவலின்படி, டெல்லி, அதன் அண்டை மாநிலங்களில் பண்ணைக் கழிவுகளை எரிப்பது குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், காற்று மாசுபாட்டின் தன்மை தேசிய தலைநகர் பகுதி, தென்மேற்கு இந்தியப் பகுதிகளில் அதிகரித்த வண்ணமே உள்ளது.

காற்று வீசும் தன்மைக்கேற்ப டெல்லியில் காற்று மாசுபாடு விகிதம் அமைகிறது. டெல்லியில் காலை 10 மணி நிலவரப்படி, காற்று மாசுபாட்டின் குறியீடு 279ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 302ஆக இருந்தது.

டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அங்கு சாதகமான வானிலை இருந்த காணத்தினால் நேற்று காற்றின் தரம் சற்று மேம்பட்டது. இருப்பினும், டெல்லி தொடர்ந்து மோசமான காற்று மாசுபாட்டினை கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.