நடுங்க வைக்கும் டெல்லி குளிர் !

புத்தாண்டு தினமான இன்று டெல்லியில் அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றது.காலை 6 மணி அளவில் சாலைகளில் பனி மூட்டமாகவும் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது.

அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது என்று வானிலை ஆய்வு மையத்தின் வட்டாரத் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்ப நிலை என்று என்.டி.டி.வி. இணைய தளம் கூறுகிறது.