மூன்றாவது கோவிட் அலையை சமாளிக்க டெல்லி தயாராக உள்ளது என்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் !

இந்தியாவில் கரோனா தொற்றின் 2 ம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 3 ம் அலை தாக்கும் சூழல் வரலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.இதனால் கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள டெல்லி தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் இரண்டாவது அலையின் உச்சத்தில், ஒரே நாளில் 28,000 வழக்குகள் பதிவாகியுள்ளன.

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் 19,420 டன்கள் ஆக்சிஜன் சேமிப்பு மையங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

நிபுணர்களுடனான எங்கள் ஆலோசனையின் அடிப்படையில், மூன்றாவது அலையின் உச்சத்தின் போது, ​​37,000 வழக்குகள் இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த எண்ணை மனதில் வைத்து, நாங்கள் எங்கள் படுக்கைகள், ஆக்ஸிஜன் திறன் மற்றும் மருந்துகளை அதிகரிப்போம் என்று அவர் கூறினார்.