எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன – பிரதமர்

பிரதமரின் ட்விட்டர் கணக்கு ஹேக்

வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் மூன்று சட்டங்களைக் கொண்டுவந்தது. அந்த வேளாண் சட்டங்களுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்புகள் இருந்துவந்த நிலையில், ’டெல்லி சலோ’ என்ற பெயரில் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசி-பிரயாக்ராஜ் இடையே அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் வரலாற்று சீர்திருத்தங்கள் என்றும் வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

முந்தைய அரசு விவசாயிகளை ஏமாற்றியதாக கூறிய பிரதமர், எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டினார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயப்பதற்காகவே கொண்டு வரப்பட்டன என்றும் அவற்றின் பலன்களை வரும் நாட்களில் உணர்ந்து கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.