“தீபாவளிப் பண்டிகை முடியும் வரைபள்ளிகள் திறக்கப்படாது

“தீபாவளிப் பண்டிகை முடியும் வரைபள்ளிகள் திறக்கப்படாது” என மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இதற்கிடையே அண்மையில் கொரோனா ஊரடங்கு தளர்வு 5.0 -இன் படி வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவிக்கையில், “கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பள்ளிகளில் இணையவழிக் கல்வி எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு சில இடங்களில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும்
மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படாது அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here