நீட் தேர்வு என்பது தேசிய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர நடத்த படும் தேர்வு.நீட் தேர்வு வேண்டும் என்று சில தரப்பு கூறுகிறது.இது தேவை இல்லை என்று மற்றோரு தரப்பு கூறப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு 2021 செப்டம்பர் 12ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்காக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 6 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்க பட வேண்டும் என்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கைவிடுத்தனர்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நர்சிங் படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்களை கருத்தில் கொண்டு கடைசி தேதி நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



