இத்தாலி அரசு ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது !

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை புரிந்துள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலியின் தடுப்பூசி குழு கூறும்போது, வெள்ளிக்கிழமை மட்டும் இதுவரை இல்லாத அளவு 6 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்தாலியில் இதுவரை 3.7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இத்தாலியில் இதுவரை 41% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஐரோப்பாவில் இத்தாலி இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 10%க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.