கேரள பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் !

கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களான தட்சின கன்னடா, உடுப்பி, சாம்ராஜ்நகர், குடகு மாவட்டங்களில் அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வந்த நர்சிங் மாணவிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து கர்நாடகா வருவோர் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை கொண்டுவர வேண்டும்.2 தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.