இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதில் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் சண்டிகரில் நடத்தப்பட்ட ஆய்வில் 71 சதவிகித குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
தரவுகளின்படி, 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது மார்ச்சில் மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 7.04% ஆக அதிகரித்துள்ளது. மேலும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் 100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதில் 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் இந்த மாற்றம் கண்டு அஞ்சத்தேவையில்லை, சிறிய அளவில்தான் குழந்தைகளைப் பாதிக்கிறது என்று கூறும் நிபுணர்கள் குழு வயதானோர் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு கோவிட் பாதிப்பிலிருந்து மீள மீள அது குழந்தைகளைத் தொற்றுவது லேசாக அதிகரித்து வருகிறது என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை



