covid cases in IIT madras : சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

covid cases
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் தலைதூக்கும் கொரோனா

covid cases in IIT madras : கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இந்த உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.மேலும் இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று காரணமாக காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கிவருகிறது.

ஐஐடி வளாகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது, மேலும் இரண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏப்ரல் 22, வெள்ளிக்கிழமை மேலும் பதினெட்டு பேர், ஐஐடி-மெட்ராஸில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேர்மறை சோதனை செய்த 12 பேருடன் இவர்கள் கூடுதலாக இருந்தனர், வளாகத்தில் சமீபத்திய தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கையை 30 ஆகக் கொண்டு சென்றது.covid cases in IIT madras

இதையும் படிங்க : gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை

தற்போது வரை 55 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.”சென்னை ஐஐடியில் இதுவரை 1,470 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 30 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 25 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதுமே கரோனா தொற்று சற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,527 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

( covid cases increasing in IIT madras )