education news : பாகிஸ்தானில் பட்டம் பெற்றால் இந்தியாவில் வேலை கிடையாது

education news
பாகிஸ்தானில் பட்டம் பெற்றால் இந்தியாவில் வேலை கிடையாது

education news : பாகிஸ்தானில் உள்ள எந்த ஒரு பட்டப்படிப்பு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் சேர விரும்பும் இந்திய மாணவர், இந்தியாவில் வேலை தேடவோ அல்லது உயர்கல்வி பெறவோ தகுதி பெற மாட்டார்கள் என UGC தெரிவித்துள்ளது.

இந்திய மாணவர்களை உயர்கல்வி பயில பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) இணைந்து இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானின் எந்தவொரு பட்டப்படிப்பு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் சேர்க்கை எடுக்க விரும்பும் எந்தவொரு இந்திய மாணவர்களும் பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை அல்லது உயர் படிப்புக்கு தகுதி பெற மாட்டார்கள் என்று UGC தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகள் மற்றும் இந்தியாவினால் குடியுரிமை பெற்றவர்கள், உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற்ற பிறகு இந்தியாவில் வேலை தேடுவதற்கு தகுதியுடையவர்கள்.

இதையும் படிங்க : covid cases in IIT madras : சென்னை ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இந்த உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.மேலும் இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று காரணமாக காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கிவருகிறது.

( indian students to not pursue higher education in pakistan )