கோவேக்சின் மருந்தை தயாரிக்கும் மேலும் ஒரு நிறுவனம்

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று கடந்த மாதம் முதல் மேலும் அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஏற்கனவே தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. எனவே கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹாப்கின் என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளிக்குமாறு மகாராஷ்டிரா முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் கோவேக்சின் தடுப்பூசியை தயாரிக்க மும்பையை சேர்ந்த ஹாப்கின் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான அனுமதி கடிதத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், மகாராஷ்டிரா தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ளார். ஒரு வருடத்துக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.