புகழ்மிக்க அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி இல்லை !

மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது.கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோவிலுக்குள்ளேயே சித்திரைத் திருவிழா எளிமையாக நடைபெற்றது.

இந்த நிலையில், அழகர் ஆற்றில் இறங்கும் விழாவிற்கு அனுமதி வழங்கக்கோரி அருண் போத்திராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் கரோனா மீண்டும் பரவி வரும் சூழலில் இந்த நிகழ்வை நடத்துவது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பினர்.

மேலும், வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை குப்பை மட்டும் தான் உள்ளது என்றும் விமர்சித்தனர். இதையடுத்து, அவ்விழாவிற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் அருண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.