வித்யாசமாக நடைபெறவிருக்கும் பட்ஜெட் 2021 தாக்கல்

வரும் பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காகிதமில்லா பட்ஜெட்டாகத் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை பட்ஜெட் தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களும் அச்சாகவில்லை.

அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கும் பட்ஜெட் திட்டங்களில் நடுத்தர வர்க்கத்தில் வரி செலுத்துவோரை உற்சாகப்படுத்தும் பல விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில், ஒரு நபரின் வரிவிதிப்பு வருமானம் ஆண்டுக்கு ரூ .5 லட்சம் வரை இருந்தால் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளுக்கும் தள்ளுபடியை (Tax Exemption) அரசாங்கம் முன்மொழிந்தது. ஆனால் அடிப்படை விலக்கு நிலைகள் மாற்றப்படாமல் இருந்தன.

கடந்த ஆண்டும், அடிப்படை வரிவிலக்கு வரம்புகள் மாற்றப்படாமல் இருந்தன. ஆனால், தற்போதுள்ள வரி வழிமுறைக்கும் ஒரு மாற்று வரு முறைக்கும் இடையில் தங்களுக்கு ஏற்ற ஒரு முறையை தேர்வு செய்துகொள்ளும் வசதியை அரசாங்கம் வரி செலுத்துவோருக்கு அளித்தது.