சீனாவில் மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் தொடங்கியதால் 100-க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து உலக நாடுகள் முழுவதும் பரவி பல கோடி மக்கள் உயிரிழந்தனர். இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தொடர் மரணங்கள் நிகழ்ந்தது. கடுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோதும், கொரோனாவின் பரவல் கட்டுக்குள் நிற்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் கொரோனா பல காலங்கள் தொடரும் என்றும் எச்சரித்தது.

மேலும் ஊரடங்கு மட்டுமே தீர்வு என்றும் முடிந்தவரை வீட்டிலே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்தியாவில் ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, புலம் பெயர் தொழிலாளர்கள் பல ஆயிரம் கிலோமீட்டர் நடந்தே சென்ற அவலம் நடைபெற்றது.இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டதன் மூலம் பல நாடுகளில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சீனாவில் கொரோனா பரவத்தொடங்கினாலும், சீனா அரசு தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியதால் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளும் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் பகுதியிலிருந்து விமானத்தில் பயணம் செய்த வயது முதிர்ந்த தம்பதியரிடமிருந்து கொரோனா தொற்று பரவியதாக கூறப்படுகிறது.