வருகின்ற 1ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி

மூத்த குடிமக்களுக்கும் வருகிற 1-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே சுகாதாரத்துறையை போன்று மற்ற துறையை சேர்ந்த முன்கள பணியாளர்களும் இலவசமாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது எந்த வகையிலும் கட்டாயம் அல்ல. அவரவர் விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்ளலாம். இதன் காரணமாகத்தான் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சற்று குறைவாக உள்ளது.

பிறதுறை முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும். ஒவ்வொரு துறையினருக்கும் முன்பதிவு செய்வது எப்படி என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.