தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம் -!

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் மக்கள் தனிமனித இடைவேளை மற்றும் முகக்கவசம் இவைகளை சரியாக பின்பற்றாததுதான் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பொது மக்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், மார்க்கெட்டுகளில் பணிபுரிபவர்கள், பஸ், ரயில் நிலையங்களில் வேலை பார்ப்பவர்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு எந்த நோயும் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் தடுப்பூசி போடுவதற்காக திறக்கப்பட்டிருந்தாலும் இதையும் ,மேலும் அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.