குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 17 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இந்தியாவில் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை மேற்கொள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி  அளித்துள்ளது.

மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, 2ம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்துவதற்கு மருந்து கட்டுப்பட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.


அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளது. ஆரோக்கியமான 525 தன்னார்வலர்களிடம் இந்த தடுப்பூசியை இரண்டு தவணைகளாக செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது