இன்று முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்பதிவு தொடக்கம்

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. தடுப்பூசிிபோட்டுக் கொள்ள விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவின் செயலி மற்றும் ஆரோக்கிய சேது செயலி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் . www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.