கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறும்- மத்திய அரசு

பஞ்சாப், அசாம், ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஒத்திகை கடந்த செவ்வாய்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜனவரி 2ம் தேதி ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தவும், மாநில தலைநகரங்களில் குறைந்தது 3 இடங்களில் ஒத்திகையில் ஈடுபடவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் சென்னை, நீலகிரி, நெல்லை உள்ள மாவட்டங்களில் உள்ள 11 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆரம்ப நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம் என ஐந்து இடங்களில் ஒத்திகை நடைபெறும்.

இதேபோல், ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை, நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, நெல்லை மாநகராட்சி மற்றும் ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் ஒத்திகை மேற்கொள்ளப்படும். இதற்காக 21, 000 செவிலியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.