இன்று முதல் பள்ளிகள் திறப்பு!

cbse-announces-second-semester-exam-date-for-10th-and-plus-two-students
cbse-announces-second-semester-exam-date-for-10th-and-plus-two-students

கரோனா தொற்றால் 10 மாதங்களாக மூடிக் கிடந்த பள்ளிகள், இன்று முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை வரவேற்க கேரளாவில் உள்ள பள்ளிகள் அனைத்தும் புதுப்பொழிவுடன் தயாராகி வருகின்றன.

ஜனவரி 1ஆம் தேதி முதல் இரண்டு ஷிப்ட் கணக்கில் 50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வருகை தர முடியாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் தொடர் பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும்.

வருகின்ற மார்ச் 17 முதல் 30ஆம் தேதி வரை பத்து மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என கேரள அரசு கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி மற்றும்12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழக்கமான வகுப்புகள் கரோனா வழிக்காட்டுதலுடன் நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வகுப்பறைக்குள் கிருமி நாசிளி தெளிப்பான் வசதிகள் மற்றும் மாணவர்களின் வெப்பநிலையை கண்காணித்தல் ஆகியவை நிறைவடையும் தருவாயில் உள்ளன. பள்ளி வளாகத்தில் சோப்பு, வெப்ப ஸ்கேனர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் தொடங்கப்படுவதால் வகுப்பறைகள், நூலகங்கள், ஆய்வகங்கள், நீர் அருந்தும் பகுதிகள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறையின் சமீபத்திய தரவுகளின்படி, நடப்பு கல்வியாண்டில் கேரள அரசு நடத்தும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்புகளில் 1.75 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

பொதுக் கல்வி புத்துணர்ச்சி பணி அமல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 6.8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 47 ஆயிரத்து 760 மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.