18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம் – தமிழகம் !

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.தற்போது வரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட, சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்நிலையில், 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. நியூ திருப்பூர் பகுதியில் உள்ள நேதாஜி ஆயுத ஆடை பூங்காவில் தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.