தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

கரோனா தொற்று பரவல் தற்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.சமூக இடைவேளை மற்றும் முகக்கவசம் இவைகளை கண்டிப்பாக கடைபிடிக்க அரசு அறிவுறுத்துகிறது.மேலும் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் கரோனா தொற்றுடன் தோ்தல் நடத்துவது தொடா்பாக தமிழக தோ்தல் துறை ஆலோசனைகளை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறுவது, பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

அரசு மருத்துவ நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் 45 வயது முதல் 59 வயதுக்கு உள்பட்ட இணை நோய் உள்ளவா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா், சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், தோ்தல் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் வயது வரம்பின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள பணியாளா்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் கேட்டுக் கொண்டுள்ளாா்.